தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க உலக பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. ராஜ ராஜ சோழன் எப்படி இந்த கோயிலை கட்டினார், அதன் பின்னனி, சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

பெரிய கோயில் என அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது
கோயில் பெயர் மாற்றம்:
பிரகதீஸ்வரர் கோயில் இதற்கு முன்பு ராஜராஜேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. தற்போது அழைக்கப்படும் இந்த பிரகதீஸ்வரர் எனப்படும் பெயரானது மராட்டியர்களால் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயிலை மகா சிவன் கோவில் என்றும் அழைத்து வந்துள்ளனர்.
கோபுர அதிசயம்:
இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் மதிய வேளைகளில் இந்த கோவிலில் உள்ள கோபுரத்தின் நிழல் ஆனது கீழே விழுவதில்லை என்பதாகும்.
நந்தி சிலை மாற்றம்:
இங்கு சிவபெருமானுக்கு எதிரில் உள்ள பெரிய நந்தி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. அதோடு ராஜராஜ சோழன் வைத்த நந்தி சிலை மாற்றப்பட்டு, மராட்டியர்களால் வைக்கப்பட்ட நந்தி சிலை தான் இப்போது உள்ளது.
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம்... கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் சிறப்புகள்
ராஜ ராஜன் வைத்த நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதால், அதில் அதிர்ச்சியும், பிரம்மிப்பும் அடைந்த மராட்டியர்கள் அந்த நந்தி சிலையை அகற்றிவிட்டு புதிய நந்தி சிலை வைத்துள்ளனர். இன்றளவும் அந்த பழைய நந்தி சிலை கோயில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை:
இந்தப் பெரிய கோவிலானது பல சுரங்கப் பாதைகளை கொண்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. பல்வேறு இடங்களை இணைக்கும் இந்த பாதைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பாதையில அந்த காலத்தில் வாழ்ந்த முனிவர்கள், ராஜாக்கள், ராணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரகசியமாக செல்ல பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக தீபாவளி மகா சிவராத்திரி, மகர சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்களில் இந்த பாதைகள்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
கிரானைட் கற்கள்:
கோயிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோயிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
ராஜ ராஜன் ஏன் போற்றப்படுகின்றார்?
ராஜ ராஜ சோழன் வெறும் மன்னனாக இருந்து இந்த கோயிலை கட்டி இருந்தால், கோயிலை கட்டியதாக அவரின் பெயர் மட்டும் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் கோயிலில் உள்ள கல்வெட்டி கோயிலை கட்ட யார் யார் பணியாற்றினார்களோ, கட்டடக்கலை நிபுணர்களிலிருந்து அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோயில் பணி செய்ய உதவியவர்களுக்கு உதவியவர்களின் பெயர் கூட கல்வெட்டில் பதிவு செய்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.

Popular posts from this blog

Electric Car Batteries and Characteristics Electric car batteries are one of the most important components in a car system. In BEV cars, batteries are the only “life”. Because, only electrical energy stored in the battery is the only source of energy driving the BEV car. There are no other sources. The types of electric car batteries are also depends on the car system.

பொதுவான பராமரிப்புகள் மற்றும் வாகனம் வைத்திருப்பவரும், புதிதாக வாங்க நினைப்பவரும் அதிகமாக கவனம் செலுத்துவது நீண்ட நாள் உழைப்பும், அதிகப்படி செலவில்லாத பாராமரிப்புச் செலவும், காலம் சென்றாலும் நல்ல மதிப்புடன் விற்பனை விலை அமைய வேண்டும் என்பதாகும்.

Make walking part of your routine அதிகாலை நடைப்பயிற்சி தரும் நன்மைகள்