பொதுவான பராமரிப்புகள் மற்றும் வாகனம் வைத்திருப்பவரும், புதிதாக வாங்க நினைப்பவரும் அதிகமாக கவனம் செலுத்துவது நீண்ட நாள் உழைப்பும், அதிகப்படி செலவில்லாத பாராமரிப்புச் செலவும், காலம் சென்றாலும் நல்ல மதிப்புடன் விற்பனை விலை அமைய வேண்டும் என்பதாகும்.

பொதுவான பராமரிப்புகள்


✇ வாகனம் வைத்திருப்பவரும், புதிதாக வாங்க நினைப்பவரும் அதிகமாக கவனம் செலுத்துவது நீண்ட நாள் உழைப்பும், அதிகப்படி செலவில்லாத பாராமரிப்புச் செலவும், காலம் சென்றாலும் நல்ல மதிப்புடன் விற்பனை விலை அமைய வேண்டும் என்பதாகும்.
ஒவ்வொருவரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனத்தை சீரான முறையில் பராமரித்து வருவதன் மூலம் குறைந்த பெட்ரோல் செலவு, அதிக கால உழைப்பு, இனிய பயணம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை போன்றவைகளை அடையலாம்.
முதலில் நீங்கள் வாகனம் ஓட்டும் போது பின்வருவனவற்றில் கவனம் தேவை :

✇ உங்கள் வாகனத்தின் டயர்களில் சரியான காற்று அழுத்தம் உள்ளதா? என்பதை குறைந்தது மாதத்திற்கு இருமுறை சரிசெய்து கொள்ளுங்கள், எப்பொழுதும் வாகனத்தில் அமர்ந்து பயணிக்கும் முன் வாகனத்தின் டயர்களிலுள்ள காற்று அழுத்தம் சரியான நிலையிலுள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

✇ ஏனெனில் சரியான காற்று அழுத்தமில்லாமல் வாகனத்தை ஓட்டுவதால் அதிக பெட்ரோல் செலவும், விரைவில் டயர்கள் தேய்ந்தும் விடுகிறது, இதனால் விரைவில் புதிய டயர்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டியுள்ளது.

✇ வாகனத்தை Start செய்தவுடன் அதிக Accelerate செய்யாமல் நிதானமான விதத்தில் Engine-க்கு தகுந்த Accelerate தரவும் அது போல் அதிக நேரம் நிறுத்த வேண்டிய தருணத்தில் எஞ்சினை ஓடவிடாமல் நிறுத்துவது சிறந்தது.

✇ சரியான வேகத்திற்கேற்ற Gear-யை செலுத்தவும். அடிக்கடி திடீர் வேகம் திடீர் மிக நிதான வேகத்துடன் செல்வதால் பெட்ரோல் செலவு அதிகமாகிறது. அதுபோல் Brake போடும் பொழுது சீரான முறையில் Brake-ஐ அழுத்த வேண்டும்.
அதனால் Brake தேய்மானத்தை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் அடிக்கடி திடீர் Brake போடுவதால் Brake Pad சீக்கிரமாக தேய்வதோடு அல்லாமல் வாகனத்தின் டயரின் ஒரு பகுதியிலும் அதிக தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.

✇ தேவையில்லாமல் கிளட்ச்சியோ (Clutch) அல்லது Brake Pedal-யோ மிதித்து கொண்டிருக்க வேண்டாம். நெடுஞ்சாலையில் ஓட்டுபொழுது அதிகப்படியான வேகமில்லாமல் சீரான முறையில் வாகனத்தை ஓட்டினால் அதிக பெட்ரோல் செலவழிப்பை தடுக்கலாம். Signal போன்ற இடங்களில் சிலர் தேவையில்லாமல் Clutch-யில் காலை வைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

✇ உங்கள் வாகனத்தில் அதிக படபடப்பு (vibration) இருந்தால் Wheel Alignment செய்துக் கொள்ளுங்கள். Wheel Alignment செய்வதால் டயர் தேய்மானத்தை தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல் Vibration (படபடப்பு) தவிர்த்து Steering நேராகவும், ஒரே சீராகவும் அமைதல் போன்ற பயன்களை பெறலாம்.
வாகனத்தின் சில முக்கிய Maintenance service பற்றிப் பார்ப்போம் :

✇ பொதுவாக 3000 கிலோ மீட்டரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிறகு Engine Oil மாற்றுவது நல்லது. முக்கியமாக இது உங்கள் வாகனத்தை பொறுத்தும் மாற்றப்படும் Engine Oil-யின் தரத்தை பொறுத்தது ஆகும்.

✇ இஞ்சின் ஆயில்கள் உங்கள் வாகனத்தின் இஞ்சினுக்கு பாதுகாப்பாகவும், குளிரூட்டவும், தேய்மானத்தை தவிர்க்கவும் உதவுகிறது.

✇ எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வாகனத்தின் Engine Oil அளவு சரியாக உள்ளதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள் அதுப்போல் Oil Filter-யை குறைந்தது ஒவ்வொரு 10,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.

✇ ஒவ்வொரு 20,000 கி.மீக்கு ஒருமுறை Spark plug நிலைமையை சரிபார்த்து தேவைப்பட்டால் புதிய Spark plug-யை மாற்றிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் Battery-யின் தண்ணீர் அளவு, Brake Pad மற்றும் அதன் Fluid அளவு, Clutch Fluid அளவு, Power Steering-ஆக இருந்தால் அதன் Fluid அளவை சரிபார்ப்பது நல்லது தேவைப்பட்டால் தேவையான அளவு நிரப்பிக் கொள்ள வேண்டும்.

✇ Automobile மெக்கானிக் வொர்க்ஷாப் (workshop) செல்லும்போது மேலே குறிப்பிட்டதை சரி செய்வதோடு அல்லாமல் Clutch Pedal, Brake Pedal, Brake, Steering wheel மற்றும் அதன் தொடர்புகள் Tire & battery போன்றவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

✇ ஒழுங்கான பராமரிப்பும், அக்கறையும், சீரான வாகன வேகமும், உங்கள் வாகனத்தை அதிக காலம் உழைக்க வைப்பது மட்டுமில்லாமல் இனிய பயணமாக அமைய உதவுகிறது 
மழை காலத்தில் பைக்கின் பராமரிப்பு :

✇ மழை காலத்தில் வாகனங்களை சரியாக பராமரித்து வந்தாலே, விபத்துக்களை தவிர்க்கலாம். நடுவழியில் தவிக்க வேண்டிய நிலை ஏற்படாது.

✇ டயர்களில் காற்றின் அளவை முறையாக கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் குறைக்க வேண்டும் அல்லது குறைவாக இருந்தால் சரியான அளவுக்கு நிரப்ப வேண்டும்.

✇ காற்று குறைவாக இருந்தால், வாகனத்தில் ஆணி போன்ற கூர்மையான பொருட்கள் எளிதில் குத்தி, டயரை பஞ்சராக்கிவிடும். அதுவும், டபுள்ஸ் போகும் போது, இதற்கான வாய்ப்பு அதிகம். காற்று அதிக அளவில் இருந்தால், பிரேக் பிடிக்கும் போது திடீரென, கிரிப் குறையும்.

✇ பொதுவாக, டயரில் காற்றின் அளவை பராமரிக்கா விட்டால், எரிபொருள் செலவு அதிகரிக்கும்.
டயர்களில் உள்ள, டிரெட் எனும் பற்கள், சரியாக உள்ளனவா என வாரம் ஒரு முறை சோதிக்க வேண்டும். அவை தேய்ந்து போயிருந்தால், விபத்தில் சிக்கவும், பஞ்சராகவும் வாய்ப்பு அதிகம்.

✇ டயர் பஞ்சராகும் போது, தள்ளிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாத வரை பரவாயில்லை. தள்ளிச் செல்லவேண்டி இருந்தால், டயரில் குத்தியிருக்கும் கூர்மையான பொருளை எடுத்துவிட வேண்டும். இல்லையேல், டயர் சுழலும் போது, டியூப் சேதமாகி விடும்.

✇ சாலையோர கடைகளில், சிலர், தரம் குறைந்த, டியூப் பொருத்தி விடுவர். அது, எப்போது வேண்டுமானாலும் காலை வாரும். அதனால், தரமான, டியூப் களை பொருத்த வேண்டும்.

✇ டயர்களின், அலைன்மென்ட் சரியாக இருக்கிறதா என, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் பரிசோதிக்க வேண்டும்.

✇ காராக இருந்தால், ஸ்டெப்னியை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். டயரை, கழற்றி மாட்ட தெரிந்து கொள்வது நல்லது.

✇ மோட்டார் பைக்கின் இதய பகுதியான, இன்ஜினின் செயல்பாட்டை வைத்தே, வாகனத்தின் ஆயுள் கணக்கிடப்படுகிறது. பைக்கில், இன்ஜின் ஆயில் சரியான அளவு இருக்கிறதா என்பதை கண்காணிப்பது அவசியம்.

✇ இன்ஜின் ஆயில் அளவு குறைவாக இருந்தால் உடனே, டாப் அப் செய்ய வேண்டும். இன்ஜின் ஆயிலை குறைவான அளவில் வைத்து வாகனத்தை ஓட்டினால், முதலுக்கே மோசம் என்பது போல, இன்ஜின் பழுதாகி விடும். அதேபோல, ஆயில் கசிவு இருக்கிறதா என்றும் சரி பார்க்க வேண்டும்.
பைக்கை கழுவும் முன், ஸ்டார்ட் பட்டன் மற்றும் சுற்றியுள்ள இடங்கள், எச்.டி., காயில், சைலன்ஸர் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர் போட்டு மூட வேண்டும். பெயின்ட் பூசப்பட்ட இடங்களில், கெரசின், சோப் போட்டு கழுவ கூடாது.

✇ பைக் பேட்டரியில், எலக்ட்ரோலைட் அளவு சரியாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இல்லையேல், டிஸ்டில்ட் வாட்டர் இட்டு நிரப்ப வேண்டும்.

✇ வாகனத்தை ஓட்டாமல் இருந்தாலும் பேட்டரியில், எலக்ட்ரோ லைட் அளவை சரியாக பராமரிக்க வேண்டும்.

✇ பொதுவாக, 2 ஸ்டிரோக்பைக்கில், ஸ்பார்க் பிளக்கை, 750 கி.மீ., பயணத்திற்கு பிறகும், 4 ஸ்டிரோக்பைக்கில், 1,500 கி.மீ., பயணத்திற்கு பிறகும் சுத்தம் செய்யவேண்டும். எமரி பேப்பர் வைத்து, ஸ்பார்க் பிளக் பாயின்ட்டை சுத்தம் செய்யலாம்.

✇ பிரேக், லூசாகவோ, டைட்டாகவோஇருந்தால் ஆபத்து. வாகன ஓட்டியின் வசதிக்கேற்ப அது முறையாக பராமரிக்கப்பட வேண்டும். பிரேக், கிளட்ச் வயர்களை புறப்படுவதற்கு முன் சரிபார்ப்பது சிறந்தது. இன்சூரன்ஸ் மற்றும் வாகன வரி ரசீது நகல்களை எப்போதும் பைக்கில் வைத்திருக்க வேண்டும்.
கவனமாக காரைப் பராமரிக்க டிப்ஸ்
கோடைக் காலத்தில் நீண்ட தூர பயணத்தின்போது கார் அதிக சூடேறிவிடும் இதனால் ரேடியேட்டர், கூலண்ட் ஆகியவற்றையும், அனைத்து ஹோஸ்களும் சரியாக செயல்படுகின்றனவா என சோதித்துக் கொள்ள வேண்டும். சென்ட்ரல் லாக் சரியாக லாக் செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.

✇ கோடைக் காலத்தில் கார் டயர்களின் காற்று விரைவில் வெளியாகும். இதனால் அடிக்கடி காற்றழுத்தத்தை சோதிக்க வேண்டும். நீண்ட பயணம் முடிந்த உடனேயோ அல்லது கார் டயர் சூடாக இருக்கும்போதோ காற்றடிக்கக் கூடாது.

✇ காரின் ரப்பர் பகுதிகள் வெப்பம் காரணமாக இலகிவிடும். வைபர் பிளேடு, கூலண்ட் ஹோஸ், ஆயில் ஹோஸ் உள்ளிட்டவற்றை கவனித்து மாற்ற வேண்டும். காரை சர்வீசுக்கு விடும்போது இவை மாற்றவேண்டியிருந்தால் மாற்றி விட வேண்டும்.

✇ காரை வெயிலில் வைத்து சோப்பு போட்டு கழுவக் கூடாது. வெயிலால் சோப்பு உலர்ந்து கறையாகப் படிந்துவிடும். இதைப் போக்க காருக்கு வேக்ஸ் பாலிஷ் செய்ய வேண்டியிருக்கும்.

✇ காரை வெயிலில் நிறுத்திவிட்டு பிறகு ஓட்டும் போது ஏசியை முழு வேகத்தில் செயல்படுத்துவதோடு, காரின் ஜன்னலை சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான் வெளி வெப்பமும், காரினுள் நிலவிய வெப்பமும் சீராகி, ஏசி குளிர்ச்சி விரைவில் கிடைக்கும்
மூன்று மாதங்கள் கழித்து காரை எடுக்கிறீர்கள் என்றால், சர்வீஸ் சென்டரில் ஒருமுறை கொடுத்து ஜெனரல் செக்-அப் செய்த பிறகே ஓட்டுவது நல்லது.

✇ நீண்ட பயணத்துக்குப் பிறகும் உச்சி வேளையிலும் பெட்ரோல் நிரப்பக் கூடாது. நீண்ட பயணம் காரணமாக பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் ஆவியாகியிருக்கும்.

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

Popular posts from this blog

Electric Car Batteries and Characteristics Electric car batteries are one of the most important components in a car system. In BEV cars, batteries are the only “life”. Because, only electrical energy stored in the battery is the only source of energy driving the BEV car. There are no other sources. The types of electric car batteries are also depends on the car system.

Make walking part of your routine அதிகாலை நடைப்பயிற்சி தரும் நன்மைகள்